அன்பார்ந்த சத்யா குடும்பத்தின் உறுப்பினரே.. வணக்கம்..!

தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும் மனநிறைவுடனும் மகிழ்ந்திருக்க சத்யா குடும்பத்தின் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்..!

கொரோனா கால மன அழுத்தங்களில் இருந்து விலகி, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய சமயம் இது. கொண்டாட்டங்கள்தானே எப்போதும் நம்மை உற்சாகப்படுத்தும். அப்படி நமக்கு நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது உங்கள் சத்யா.

நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார் - சத்யா நடத்தும் பிரமாண்ட திறமை திருவிழா. உங்கள் வீட்டில் இருக்கும் சூப்பர் ஸ்டாரை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்ட மேடை அமைத்துக் கொடுக்கிறது சத்யா.

உங்கள் வீட்டில் அம்மாவோ அப்பாவோ கிச்சன் ரெசிப்பி செய்து அசத்துவதில் சூப்பர் செஃப்பா… அக்கா சூப்பர் சிங்கரா… தம்பி அட்டகாசமான டான்ஸரா…. பெரியப்பா ஸ்டாண்ட்-அப் காமெடிகளில் பிச்சு உதறுவாரா… தங்கச்சி கலகலவென்று காம்பியரிங் செய்வார்களா… சித்தப்பா மிமிக்ரியில் மிரட்டுவாரா… உங்க வீட்டு சுட்டியின் வாலுத்தனம் வைரல் ஆக வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

அதற்கு நீங்க செய்ய வேண்டியது மிகவும் சிம்பிள்…

உங்க வீட்டு சூப்பர் ஸ்டாரின் திறமையப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டு, பக்கத்தில் உள்ள அப்ப்ளிகேஷன் பார்மில் கீழே உள்ள அப்ப்ளிகேஷன் பார்மில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மொபைலில் க்ளிக் செய்த ஒரு படம் அல்லது குட்டி வீடியோ அனுப்புவது நலம். ரிஜிஸ்டர் செய்பவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் டாப் 50 திறமைசாலிகளுக்கு சத்யா சார்பாக Tamilnadu Now Media மூலம் ஸ்பெஷல் கவரேஜ் அளிக்கப்படும். அந்த 50 திறமைசாலிகளில் இருந்து டாப் 3 சூப்பர் ஸ்டார் என தேர்வாகுபவர்களுக்கு, லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட ஆச்சர்ய பரிசுகள்.

மற்றவர்களுக்கும் நிச்சய பரிசு உண்டு..

நம்ம வீட்டு சூப்பர் ஸ்டாருக்கு லைக்ஸ், ஷேர் குவிக்கலாம்… வாங்க!

Categories to Choose

*  Dance
* Singing
* Arts
* Cooking
* Home Decoration
* Mimicry / Dubsmash
* Stand-Up Comedy
* Compering / Acting
* Others

Terms and Conditions

* சத்யா வாடிக்கையாளர்களின் குடும்பத்தினருக்கு இந்தப் போட்டியில் முன்னுரிமை அளிக்கப்படும். அதே சமயம், மற்றவர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க எந்த தடையும் இல்லை.

* உங்கள் வீட்டுக்குள்ளேயே செய்து காட்டுமளவுக்கான activity- தான் ஏற்றுக் கொள்ளப்படும்.

* தனி நபராகவோ, குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் இணைந்தோ உங்கள் திறமையை வெளிப்படுத்தும் activity-களை தேர்ந்தெடுக்கலாம்.

* சத்யாவுடன் இணைந்து இந்த talent hunt-ஐ நடத்துவது Tamilnadu Now Media.

* போட்டியாளர்களின் தேர்வு, நடைமுறை மற்றும் பரிசு குறித்த அனைத்து விவரங்களும் நடுவர்களின் பரிசீலனைக்கு உட்பட்டது.

sathya